மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்புகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது .
தமிழகத்தில் கொரோனா ஊரடங்குக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு நிறைவடைந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஜூலை மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான, அதாவது 2022க்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்தபின் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த காலாண்டு விடுமுறையில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–சிவகுமார், சிந்தாரிப்பேட்டை.