ரெட் அலர்ட்! தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களுக்கு Warning – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மதுரை, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சிவக்குமார்.