ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து வரி செலுத்துவோர் பெரும்பாலும் தெளிவற்ற சட்ட விதிகளை எதிர்கொள்வதால் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இல்லாததால் நிவாரணத்திற்காக உயர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு மதிப்பீட்டாளர்களை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிந்தையவரின் பனிசுமை அதிகரிக்கின்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
2021 செப்டம்பரில் இருந்து வழக்கு தொடுப்பவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும் வழக்குகளின் பெரும் தேக்கத்தை தடுக்கவும் தாமதம் இன்றி ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்துள்ளது. வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள், பொருளாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வரி ஆலோசகர்கள் இந்த நோக்கத்தை முன்னெடுப்பதற்காக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உடனடியாக அமைப்பது தொடர்பான கோரிக்கை கருத்தரங்கம் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ இந்தியா அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும் போது:
“இந்த ஜிஎஸ்டி ட்ரிபியூனல் என்பது நியாயமான கருத்தாக தாம் பார்ப்பதாகவும் ஜிஎஸ்டி பதில்களை சரியாக பிரிக்கபடும் போது ட்ரிபியூனல் இல்லை என்றால் பிந்தைய காலத்தில் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளதாக பார்லிமெண்டில் முன்னால் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதை நினைவு கூர்ந்த அவர்; இந்த ட்ரிபியூனலை அமுல் படுத்த தெரிவித்தார்.
நேர்கோட்டில் தவறுகள் நடைபெறும் பொழுது அதனை சுட்டி காட்டும் பத்திரிகை சுதந்திரம் முழுமையாக இருக்க பட வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கேள்வி கேட்டால் கேட்பவர்களை முடக்கி வைக்கும் நிலை உள்ளது என்றார். மேலும் பேசிய அவர் பங்கு சந்தை நிச்சயம் இறங்கும் நிலை உள்ளது.
வட்டி விகிதம் ஏற ஏற வருமானம் குறையும். ஒரு முறை இறங்கியது ஆனால் மீண்டும் ஏறியது. ஆனால் இன்றும் இறங்கும் வருங்காலத்தில் பங்கு சந்தை இறங்க வாய்ப்பு உள்ளது என்றார். பணமதிப்பு இறங்கும், தங்கத்தின் மதிப்பு குறையும். பங்கு சந்தையும் இறங்கும்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், இச்சங்கத்தின் மாநில தலைவர் முஹம்மது அஸ்கர், மாநில இணை செயலாளர் ஷாஜகான் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் வழக்கறிஞர் நடராஜன், டேக்ட் ஜேம்ஸ், வழக்கறிஞர் ஜெயக்குமார், சார்ட்டட் அக்கௌன்ட் ஸ்ரீதர், இந்திய தொழில் முனைவோர் சங்கம் சார்பாக, ரகுநாதன், மற்றும் விஜய் கேசவன் என பலர் கலந்து கொண்டனர்.
– சீனி, போத்தனூர்.