கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை திவான்சாபுதூர் திமுக கிளை துணைச் செயலாளர் S.M ரஹ்மான் தன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் உடன் SDPI கட்சியில் இணைந்தார்.
SDPI கட்சியில் இணைந்த நிலையில் திவான்சாபுதூர் கிளை தலைவருக்கான தேர்தலில் S.M ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் கிளை செயலாளர் தேர்தலில் சுமிதா நகர் பகுதியைச் சேர்ந்த C.காளிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து S.M ரஹ்மான் கூறுகையில் ஜாதி மத பேதமின்றி மக்கள் நலனுக்காக வேலை செய்கின்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி என்றார்.
-M.சுரேஷ்குமார்.