தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் இளஞ்சிறார் உட்பட 8பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி 3வது மைல் காமராஜா் நகா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் முடிவைத்தானேந்தல் ஓதுவாா்தெருவைச் சோ்ந்த பொன் செந்தில்முருகன் (32) என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலைபாா்த்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஓட்டலுக்கு வந்த மர்ம கும்பல் ஓசியில் பார்சல் கேட்டு தகராறு செய்துள்ளது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதையடுத்து வியாபாரம் முடிந்த பின்னர் பொன் செந்தில்முருகன் தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளா்கள் 3 பேருடன் வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு அரிவாளுடன் வந்த அந்த கும்பல் செந்தில் முருகன் உள்பட 4பேரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதில் பொன் செந்தில்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தேவராஜ், சாமுவேல், பழனிமுருகன் ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த கொலை தொடர்பாக எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராாஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக தூத்துக்குடி 3வது மைல் புதுக்குடியை சேர்ந்த தவசிபெருமாள் மகன்கள் தினேஷ் என்ற பரமசிவன் (23) அவரது தம்பி கற்குவேல் (19), முத்தம்மாள் காலனி 1வது தெருவை சேர்ந்த முத்துராமன் மகன் ராபர்ட் ரகு (23), ராஜீவ் நகர் 3வது தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் அந்தோணி அரவிந்த் (23), டீச்சர்ஸ் காலனி 2வது தெருவை சேர்ந்த தனராஜ் மகன் அந்தோணி ராஜ் (21),முருகேசன் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல் (19), மில்லர்புரம் சீயோன் காலனி பத்மநாதன் மகன் மகேஸ்வரன் என்கிற வாசு (19), மற்றும் ஒரு இளம்சிறார் ஆகிய 8 பேரை தென்பாதம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வேல்முருகன் தூத்துக்குடி.