சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251-வது நினைவு தினத்தில் பங்கேற்க வந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி அளுநர்களுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த ஆளுநர்களுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வரவேற்பு அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடனிருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி.