நம்மோடு இணைந்து ,பறவையும் சுதந்திர தினம் கொண்டாடிய வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகி வருகின்றது. பறவை ஒன்று வானில் நமது தேசியக்கொடியை ஏந்திய படி பறந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காணுமிடமெல்லாம் மூவர்ணக்கொடியும், சுதந்திர தின வாழ்த்துக்களும் , இனிப்புகளும் வழங்கி நாட்டுமக்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் பலரும் இந்தியக் கொடியை பயன்படுத்தியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை மகிழ்வுடன் பரிமாறியும் வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாட்டின் விடுதலை நாள் கொண்டாட்டம் ஒரு புறம் இருக்க சுதந்திரம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா நாங்களும் கொண்டாடுவோம்ல என்பது போல் பறவை ஒன்று நம் நாட்டின் தேசியக் கொடியை ஏந்தியவாறு வானில் பறந்து செல்கின்றது. இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ குறித்து கமெண்ட்ஸ் பக்கத்தில் முதலில் இந்த வீடியோ வானில் ட்ரோன் தேசியக் கொடியை எடுத்துச் செல்வது போல் நினைத்தேன் ஆனால் அது சுதந்திர பறவை என பகிர்ந்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.