கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பண்ணையார் பகுதியில் உள்ள காந்திகிராம் காலனியில் வசித்து வந்த பாலாஜி என்பவர் லாரியில் கிளினராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பல இடங்களில் பொருட்களை இறக்கிவிட்டு பின்னர் இடுக்கியில் புரோட்டா வங்கியுள்ளார். லாரியில் வைத்து அவசர அவசரமாக உணவருந்தும் போது தொண்டையில் சிக்கி கொள்ள அவரால் மூச்சுவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பலனின்றி உயிரிழந்தார். பாலாஜிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–ஜான்சன் மூணார்.