பாரதியார் பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி!!

நடப்பாண்டு முதல், பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், முடங்கியிருந்த இலவச கல்வித்திட்டம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு பாரதியார் பல்கலையின் கீழ், செயல்படும் கல்லுாரிகளில், இலவச கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, அதிக மதிப்பெண் பெற்றும், வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத மாணவர்களில், தகுதியானவர்களை தேர்வு செய்து, கல்லுாரிக்கு, ஐந்து பேர் வீதம், கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

முதல் இரண்டு ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ், நுாற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் பயன்பெற்றனர். ஆனால், திட்டத்தை துவக்கிய அப்போதைய துணைவேந்தர் திருவாசகம் சென்ற பின், போதிய கண்காணிப்பு இல்லாததால் முடங்கியது.2016ம் ஆண்டு மாணவர்களின் நலன் கருதி, இத்திட்டம் மீண்டும் தொடர பல்கலை தரப்பில் ஆய்வு மேற்கொண்டு, தகுதியுடைய மாணவர்களுக்கு சேர்க்கை அளிக்க, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது. இத்திட்டம் மூலம், ஏழை மாணவர்கள் 600 பேர் இலவசமாக உயர்கல்வி பெற முடியும். இது எவ்வகையிலும் கல்லுாரிகளில் சேர்க்கையை பாதிக்காமல் கூடுதலாக, 5 பேரை சேர்க்க அனுமதியளிக்கப்பட்டது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பிடத்தக்கது. இருப்பினும், திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. இந்நிலையில், தற்போது இத்திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளித்து, நடப்பாண்டு முதல் செயல்படுத்த பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், ”முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் காலகட்டத்தில் துவக்கப்பட்ட திட்டம் இது. பல்கலையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். சில கல்லுாரிகளில் விதிமுறைகள் பின்பற்றப்படாததால், 2017ல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நிறுத்தப்பட்டதற்கான முழுமையான காரணங்களை ஆய்வு செய்து, அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, தற்போது கல்லுாரிக்கு, 15 மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்துள்ளதால், நடப்பாண்டு முதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஒரு பாடப்பிரிவில், மூவருக்கு மேல் தேர்வு செய்யக்கூடாது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட, பாடப்பிரிவுகளில் 15 பேருக்கு மேல் தேர்வு செய்யப்படக்கூடாது. இதன் மூலம், 1,500 மாணவர்கள் பயனடைவர். இவர்களுக்கு டியூசன் மற்றும் விடுதி கட்டணம் கிடையாது. ”பல்கலை நிர்வாகமே விண்ணப்பங்கள் பெற்று, தகுதியான மாணவர்களை தேர்வு செய்து கல்லுாரிகளுக்கு அனுப்பும் வகையில், வரும் கல்வியாண்டு நடைமுறைப்படுத்தப்படும்,” என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சுரேந்தர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp