பாளையம்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளியில் கடந்த எட்டு வருடங்களாக பைத்துல்மால் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் ஜமாஅத்தை சார்ந்த ஏழைகளை அடையாளம் கண்டு கல்வி மற்றும் மருத்துவ உதவி புரியும் வகையில் ஜமாஅத்தை சார்ந்த ஏழை மாணவர்கள் மாணவிகளுக்கு பைத்துல்மால் நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுவிக்க பட்டது.
அதனடிப்படையில் இந்த கல்வி ஆண்டில்கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர் மாணவியர் 5 பேர் விண்ணப்பம் செய்தனர்.5 பேருக்கும் தலா 10000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு எட்டு பேருக்கு ரூபாய் 125000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.மேலும் சீறுநீரக செயல் இழப்பு நோய் உள்ள ஒருவருக்கு 17.8.2022 அன்று மருத்துவ உதவியாக 15000. வழங்கப்பட்டது.
இது போன்று அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு பதினொரும் வகுப்பு பன்ரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியர்ருக்கு ஊக்கதொகை பரிசு நிர்வாக கமிட்டி தலைவர் ஹாஜி பேராசிரியர் கே. செய்யது அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பரிசுகள் வழங்கபட்டது.
மிலிட்டரி லைன் பள்ளிவாசல் தலைவர் ஜனாப் பேராசிரியர் ஹாஜி செய்யது அப்பாஸ் அவர்கள் 17.8.2022 அன்று பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக திகழும் இந்த பள்ளி நிர்வாகத்தின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம்.
நாளைய வரலாறு செய்தியாளர்
–அன்சாரி நெல்லை.