கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் பின்புறம் அண்ணா நகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் அண்ணாநகர் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
சிறுத்தை புலிகள் ஆடு மாடு கோழிகள் ஆகியவற்றை வேட்டையாடுவது தொடரும் தொடர்கதையாகவே உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மேலும் அச்சமடைந்து உள்ளனர்.
சிறுத்தைப் புலிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.