பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் விருப்பமில்லா திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இந்த முடிவினை அவர் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி அருகே உள்ள பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் மணியரசு (30). இவர் கோமங்கலம் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் அருகிலுள்ள காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்திலுள்ள காவலர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேசென்று பார்த்தபோது, மணியரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மணியரசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் 1ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு விருப்பமில்லாததால் தற்கொலை செய்து கொண்டார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கோமங்கலம் போலீசார் தற்கொலை செய்துகொண்டதற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.