பொள்ளாச்சி வால்பாறை சாலையில் கரடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஆழியார் வழியாக வால்பாறை செல்லும் சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் காரில் வரும் பொழுது காண்டூர் கனால் மேல்புற பகுதியில் கரடி ஒன்று செல்வதை தனது மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். நேற்று இரவு யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக சாலையை கடக்காமல் சாலையில் முகாமிட்ட தாள் வாகன போக்குவரத்து தடைபட்டது அதேசமயம் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மிகுந்த கவனத்துடன் சாலையில் செல்லுமாறு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.