கோவை மாவட்டம், போத்தனூர் ஸ்ரீராம் நகர், அருள் முருகன் நகர், குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக, 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி காலை ஒன்பது மணிக்கு துவங்கியது. தேசியக்கொடி ஏற்றம் நிகழ்ச்சியில் 99 வது, மாமன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றினார்.
பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த 99 வது வார்டு பொறுப்பாளர்கள் முகமது ஜின்னா – திமுக, முரளிதரன் – திமுக சமுஸ்தீன் – திமுக மற்றும், ஏ. ரஃபீக் – அதிமுக, வசந்த ராஜன் – பிஜேபி, கோபி – பிஜேபி, கோகுலகிருஷ்ணன் – பிஜேபி, முகமது இஸ்மாயில் – காங்கிரஸ், முகமது ஹாரூன் – காங்கிரஸ்,
ஈசா – மக்கள் விழிப்புணர்வு அமைப்பு.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெரியவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக, ஏற்பாடு செய்த ஸ்ரீராம் நகர், அருள் முருகன் நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் – சாதிக், பொருளாளர் – கோகுல் மற்றும், சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சி இந்த பகுதி மக்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா.