கோவை மாவட்டம் போத்தனூர் மிகவும் பழமை வாய்ந்த ரயில் நிலையத்தையும் ரயில் சார்ந்த தொழில் கூடங்களையும் கொண்ட ஒரு சிறப்பான பகுதியாகும்.
போத்தனூர் வழியாக செட்டிபாளையம் மற்றும் வெள்ளலூருக்கும் பேருந்துகள் இயங்கி வருகின்றன. போத்தனூர் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக காந்திபுரத்திற்கும் மற்ற பகுதிகளுக்கும் செல்வோர் போத்தனூர் சாலையில் தான் கண்டிப்பாக பயன்படுத்தி ஆக வேண்டும்.இப்படியாகப்பட்ட சூழ்நிலையில் செட்டிபாளையம் ரோடு ஈஸ்வர் நகர் பகுதியில் இருந்து குறிச்சி பிரிவு வரை செல்லும் சாலையானது பாதாள சாக்கடை பணி,குடிநீர் திட்டப்பணி ஆகியவற்றால் சாலை முழுவதும் ஆங்காங்கே தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகவும், தார் சாலை என்பது முற்றிலும் சுரண்டப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டு தார் சாலை என்ற ஒன்று முன்பு இருந்ததா என்று கேட்கும் அளவுக்கு மாறி போய் உள்ளது.
இதில் மழை வேறு பெய்து விட்டால் கேட்கவே வேண்டாம் எங்கு குழி உள்ளது? தண்ணீர் எந்த அளவு தேங்கி நிற்கிறது? என்பது தெரியாமல் வாகன ஓட்டிகளின் நிலைமையோ அந்தோ பரிதாபம்! மழைநீர் தேங்கி நிற்கின்ற அந்த சாலையில் நேற்று ஒரு பேருந்து செல்லும் பொழுது அதன் முன் சக்கரம் நீர் நிறைந்த ஒரு பள்ளத்துக்குள் இறங்கி செல்லும் காட்சியை பார்க்கும் பொழுது நமக்கே அச்சமாகத்தான் உள்ளது.
அதே போன்று பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்றின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து சிக்கிக்கொண்டது. பஸ் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்களில் செல்வோரின் நிலைமையை இப்படி என்றால் இலகுரக வாகனங்களில் செல்வோரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்! இந்த சாலையில் செல்லவே பயமாக உள்ளது என்பதுதான் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் நிறைவடைந்து எப்பொழுது தரமான சாலை அமைப்பார்கள்? பொதுமக்கள் நிம்மதியாக பயணம் செய்வார்கள்?
எல்லாம் அவன் செயல்!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சி.ராஜேந்திரன். பாட்ஷா.