நெல்லை அருகே சுத்தமல்லியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், அந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் ரகுமான் கான், மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், செய்யது அலி, காஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மன்சூர் அலி வரவேற்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி ஆம்புலன்ஸ் சாவியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ.விடம் வழங்கினார். துணை பொதுச் செயலாளர் தைமியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மானூர் ஒன்றிய செயலாளர் முகமது மூஸா நன்றி கூறினார்.
-அன்சாரி, நெல்லை.