கோவையில் டைடல் சிட்டி லயன்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளர்களுக்கான சுயம்வரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், கோவை டைடல் சிட்டி லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி விளாங்குறிச்சியில் உள்ள ஆர்.ஜே.மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
5 ம் ஆண்டாக நடைபெறும் சுயம்வரம் நிகழ்ச்சிக்கான துவக்க விழாவில்,டைடல் சிட்டி லயன்ஸ் தலைவர் முத்தழகு தலைமை தாங்கினார்.விழாவில்,டைடல் சிட்டி லயன்ஸ் நிர்வாகிகள் பாண்டியன் பரணிதரன் கணபதி சுப்ரமணியன் கனகராஜ் ராமலிங்கம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆளுநர் ராம்குமார், ஆரோமிரா அன்னை சண்முகம்,பாலசண்முகம்,துணை ஆளுநர் நித்யானந்தம், மாவட்ட செய்தி தொடர்பு தலைவர் செந்தில் குமார் ஆர்.ஜே.பள்ளியின் செயலாளர் அனில் குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார்,மாவட்ட தொழில் மைய அதிகாரி கார்த்திகை வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கன்னியப்பன் ஹேமா பழனிச்சாமி சிம்ம சந்திரன் பொன்னுச்சாமி கருப்பையா துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சுயம்வர நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான வரன்களை தேர்வு செய்தனர்.இதில் தேர்வு செய்த ஜோடிகளுக்கு நவம்பர் 20ம் தேதி சென்னையில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும், மேலும் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 1.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் வழங்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– சீனி, போத்தனூர்.