கோவை சின்னவேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிறு வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான சிலம்பம், அடிமுறை, வேல்கம்பு மான்கொம்பு, சுருள் வாள், வாள் வீச்சு, வளரி போன்ற ஆயுதப் பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத்தரப்படுகிறது.
இங்கு பயின்று வரும் மாணவர்கள் தொடர்ந்து தமிழ் பாரம்பரிய கலைகளில் உலக சாதனை புரிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆண்ட்டோ பினோ சந்தோஷ் இன் மகன் ஆண்ட்டோ புதிய உலக சாதனையை செய்துள்ளார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாங்குறிச்சி ஆர்.ஜே.மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் சாதனை மாணவன் ஆண்ட்டோ சிலம்பம் கலையில் ஆறு ஆயுதங்களான ஒற்றை கம்பு மற்றும் இரட்டை கம்பு, சுருள் வாள், மடுவ் எனும் மான் கொம்பு, வாள் வீச்சு, இரட்டை சுருள் வாள் ஆகிய ஆறு ஆயுதங்களை தொடர்ந்து 13 மணி நேரம் சுற்றி உலக சாதனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதோடு நின்று விடாமல் மீண்டும் தொடர்ந்து ஐந்து மணி நேரம் அடிமுறை சுவடை செய்தும் உலக சாதனை புரிந்துள்ளார். காலை ஐந்து மணி முதல் மாலை ஆறு மணி வரை ஒரு சாதனையையும் மீண்டும் தொடர்ந்து 5 மணி நேரம் ஒரு சாதனை என இரண்டு சாதனைகளை செய்த மாணவன் ஆண்ட்டோ இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சாதனை மாணவன் ஆண்டோவிற்கு முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தின் நிறுவனர் பிரகாஷ்ராஜ் மற்றும் கோவை சிலம்ப பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து அவருக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு சாதனை புத்தகத்தின் சான்றிதழ், பதக்கம், கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் தொடர்ந்து சாதனைகளை செய்து வருவது தமிழக பாரம்பரிய கலை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-சீனி, போத்தனூர்.