கேரளா மாநிலம் மூணார் அருகில் உள்ள தொடுபுழையில் குடியத்தூர் என்னும் பகுதியில் இன்று அதிகாலை சுமார் நான்கு மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் ஒரே குடும்பத்தை சார்ந்த ஐந்து பேர் மயமாகி உள்ளனர். அங்கு உள்ள காவல் அதிகாரிகளும் தீயணைப்பு துறையினர் மற்றும் சுற்று பகுதியில் உள்ள மக்களின் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது. தற்போதய நிலவரப்படி நான்கு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உடல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிக்கொண்டது சோமன் – தங்கம்மா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ஜான்சன் மூணார்.