வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதோடு தனக்கு பிறந்த மூன்று மாத பெண் குழந்தையை படு கொலை செய்ய சொல்லி துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்த பரிதாபம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச்சேர்ந்த ரிஸ்வான் என்பவரின் மகள் அஃப்ஸா என்ற BCA பட்டதாரி பெண்ணை அந்த பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 27 வயதான தஸ்தகீர் என்பவன் அஃப்ஸாவை காதலித்து திருமணம் செய்துள்ளான் மூன்று மாதத்தில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பெண் குழந்தையை பாரமாகக்கருதி அநியாயமாக படுகொலை செய்ய வேண்டும் வரதட்சணை வேண்டும் என்று அஃப்ஸாவின் கணவன் அவன் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து அஃப்ஸாவை கொடுமை படுத்தியதால் பெற்ற குழந்தையை கொலை செய்வதற்கு மனமில்லாமல் கொடுமை தாங்க முடியாமல் நான்கு பக்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு தன் பெற்றோர் வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார் அஃப்ஸா!
இன்று அஃப்ஸா உயிருடன் இல்லை அவள் கருவில் சுமந்து பெற்ற மூன்று மாத பச்சிளங் குழந்தை ஆதரவற்ற நிலையில் அஃப்ஸாவை பெற்று கஷ்டப்பட்டு வளர்த்து BCA வரை படிக்க வைத்து காதலித்த கயவனுக்கே திருமணம் செய்து கொடுத்த பெற்றோரின் வேதனை மிக கொடுமையானது!
இது போன்ற வரதட்சணை கொடுமைகள் முஸ்லிம் சமுதாயத்தில் திருமணத்தின் பெயரால் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் அநீதிகளை கண்டு கொதித்தெழுந்து வரதட்சணைக்கு எதிராக சமுதாயத்தில் வரதட்சணை தீமையை ஒழிக்க முன்வர வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
-அன்சாரி, நெல்லை.