கோவை மாவட்டம் வால்பாறை கருமலை எஸ்டேட் உயர்நிலை பள்ளியில் புதர்கள் மண்டி இருப்பதால் புதருக்குள் இருந்து நேற்று முன்தினம் இரண்டு கரடிகள் பள்ளி துவங்கும் நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றுள்ளது.
இதைக்கண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார்கள். கேட்ட கரடிகள் இரண்டும் வனப்பகுதிக்குள் சென்று மாயமானது.
கரடி நடமாட்டத்தால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். மேலும் பள்ளிக் குழந்தைகள் பயத்துடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதைக் கருத்தில் கொண்டு வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.