உள்ளூர் மக்களுக்கு வெளியில் இருந்து பார்ப்பதற்கு சாதாரண வாழைமர தோப்பாக காட்சியளித்தது, நாளடைவில் வாழைத்தோட்டத்திற்குள் நடுவே கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அக்கிரவாரம் கிராமத்தில் முனியன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இவர் தனது தோட்டத்தில் வாழை மரத்திற்கு இடையிலே கள்ளத்தனமாக கஞ்சா செடிகளில் வளர்த்து வருவதாக வேலூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து முனியனின் விவசாய நிலத்தில் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்ற அங்கு போலீசார் சோதனை மேற்கொண்ட போது வாழைத்தோட்டத்தில் சுமார் 40 கஞ்சா செடிகளை முனியன் வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் வாழைத்தோட்டத்தின் உரிமையாளரான முனியனை கைது செய்ய தேடினார்கள் ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதை தொடர்ந்து முனியனை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரத் தேடுதலில் இறங்கியுள்ளனர்.
இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களையும் கடத்துவோர்களையும் தமிழக அரசு கண்காணித்து கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P. இரமேஷ், வேலூர்.