விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை வைத்து வழிபாடு செய்வது, ஊர்வலமாக சென்று சிலைகளை கரைப்பது தொடர்பான போலீஸ் – ஹிந்து அமைப்புகளின் ஆலோசனை கூட்டம், கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.துணை கமிஷனர்கள் மாதவன், சிலம்பரசன், மதிவாணன், சுகாசினி முன்னிலை வகித்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் தலைமை வகித்து,போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சிகளில், விநாயகர் வழிபாடுபற்றி மட்டுமே பேச வேண்டும். மற்ற மதத்தினரை தாக்கிப் பேசுவதோ, மற்ற மத தெய்வங்களை இழிவுபடுத்துவதோ கூடாது. மீறி பேசினால், அந்த இடத்திலேயே கைது நடவடிக்கை எடுக்கப்படும்.எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தவறுகளை கண்டிப்பாக போலீஸ் வேடிக்கை பார்க்காது. மாநகரத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாருடைய பேச்சு, செயல் இருந்தாலும் ஏற்க முடியாது.
வெளியூர்காரர்களை பேச அழைத்தால், அவர்களது பேச்சில் சட்டத்துக்கு புறம்பான கருத்துக்களோ, வார்த்தைகளோ இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. கடந்த காலங்களில் என்ன தவறுகள் நடந்துள்ளன, யார் தவறாக பேசினார்கள் என்று தெரிந்து கொண்டு, அது போன்று இம்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற மதத்தினர் வசிக்கும் இடங்கள், அவர்களது வழிபாட்டுத்தலங்கள், வியாபார ஸ்தலங்கள் அருகே ஊர்வலம் சென்றவுடன் வேகத்தை காட்டுவது கூடாது. பதட்டமான சூழல் உருவாக்கும் வகையில், நடந்து கொள்ள கூடாது. விநாயகர் ஊர்வலத்துக்கு தொடர்பில்லாத கோஷங்கள் எழுப்புவதை, போலீஸ் அனுமதிக்காது. விநாயகர் ஊர்வலம் என்பது ஒரு எழுச்சி ஊர்வலம். விநாயகர் ஊர்வலம், வழிபாடு குறித்த பேச்சுக்கள், கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் பேசினார்.புதிதாக குடியிருப்புகள் உருவாகியுள்ள இடங்களில், சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.