விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவ மாணவியர் 31 தானியங்களால் 2022 கொழுக்கட்டைகளை கொண்டு 8 அடி உயர விநாயகர் உருவத்தை உருவாக்கி சாதனை படைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வகையில் கோவை தடாகம் சாலை கே என் ஜி புதூர் பகுதியில் உள்ள அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி சார்பில் கலாம் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வருகிற 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால் அந்த நாளை நினைவு கூறும் வகையில் அக்கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து 31 தானியங்களை கொண்டு 2022 கொழுக்கட்டைகளால் 8 அடியில் விநாயக பெருமானை உருவாக்கி சாதனை படைத்தனர்.உலக சாதனை புத்தக நிறுவனத்தினரால் 60 நிமிடம் காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில் 29 நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகளில் விநாயகர் உருவத்தை உருவாக்கி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.முன்னதாக நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்ட அந்நிறுவனத்தினர் சாதனைக்கான சான்றிதழை கல்லூரி முதன்மை செயலாளர் சுரேஷ்குமாரிடம் வழங்கினர்.
நாளைய வரலாறு செய்திக்காக
– சீனி,போத்தனூர்.