சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள் (வயது 74). இவர் கடந்த 15-ந்தேதி அன்று மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்திருந்தார். அதில் அவர், எனது கணவர் குப்புசாமி (90) வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி மரணம் அடைந்தார். மூத்த மகன் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இளைய மகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். தந்தை இறப்புக்கு கூட அவன் வரவில்லை.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
10 நாட்கள் கழித்து சடங்கிற்கு தான் வந்தான். சடங்கு முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளான். எனக்கு எந்தவித உதவியும் செய்யாமல் தனிமையில் தவிக்க விட்டுள்ளான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.’ என்று கூறியிருந்தார். தன் மீது புகார் அளித்த தகவல் தெரிந்ததும் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் துர்காம்பாள் அளித்த புகார் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் மூத்த குடிமக்கள் பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதற்காக கடந்த 22-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவரது பெயரில் மயிலாப்பூர் போலீசார் ‘லூக் அவுட்’ இருப்பதை கண்டனர். இதையடுத்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் விமான நிலையம் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
-அன்சாரி, நெல்லை.