ஊழியர்களின் வருங்கால தேவைக்காக வைத்திருக்கும் நிதி அமைப்பு PF மூலம் அரசாங்கம் அளிக்கிறது. இந்நிலையில் ஊழியர்களின் கணக்கில் EPFO சுமார் 81,000 ரூபாயை விரைவில் டெபாசிட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசாங்கத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளம் போக வருங்கால தேவைக்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ வைத்திருப்பது வழக்கம். இம்முறையால் நம் பணிபுரியும் போது அரசாங்கம் தரும் பணம் மற்றும் நிர்வாகம் தரும் பணமும் தங்களது அக்கவுண்ட் மூலம் பணம் செலுத்தப்படும்.
இதனால் வருங்கலத்தில் வேலையை விட்டு வரும் போது அந்த பிஎஃப் பணம் கை கொடுக்கும் நோக்ககத்தில் இம்முறை கொண்டு வரபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான நிதியினை PF அக்கவுண்டில் வரவு வைக்க உள்ள நிலையில், இந்த முறை 8.1 சதவீத வட்டி கிடைக்கும். இதனால் அரசாங்கத்திடம் இருந்து ஒரு சிறப்பு தொகை PF அக்கவுண்டில் விரைவில் டெபாசிட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கணக்கில் ரூ. 10 லட்சம் இருந்தால் அவர் அக்கவுண்டில் வட்டியாக 81,000 ரூபாயும் மற்றும் ரூ. 7 லட்சம் இருந்தால் அதன் வட்டியாக ரூ.56,700 ரூபாயும் மற்றும் ரூ.5 லட்சம் இருந்தால் வட்டியாக ரூ.40,500 ரூபாயும் விரைவில் டெபாசிட் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஹேப்பி தகவலாக அமைந்துள்ளது. PF கணக்கில் சரிபார்ப்பதற்கு தங்களது மொபைல் மூலமாகவும் மற்றும் UMANG ஆப் மூலம் பணத்தைச் சரிபார்க்கலாம் என தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சிவகுமார், சிந்தாரிப்பேட்டை.