வேலூர் சத்துவாச்சாரி திரவுபதி அம்மன் உடனுறை தர்மராஜா திருக்கோயிலில் அக்னி வசந்த விழாவை ஒட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். வேலூர் சத்துவாச்சாரி திரவுபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும் அக்னி வசந்த விழாவை ஒட்டி தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதேபோல இந்த ஆண்டும் கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி பிறப்பு, சுபத்திரை திருமணம் போன்ற கதைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தினமும் சுவாமி வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான இன்று காலை துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சத்துவாச்சாரி பாலாற்றங்கறையில் பொன்னியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை சுமந்த படியும், திரவுபதி அம்மனை சப்பரத்தில் சுமந்தபடி பக்தர்கள் தீ மிதித்தனர். திருவிழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சத்துவாச்சாரி பகுதி மக்கள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P. இரமேஷ், வேலூர்.