இதுகுறித்து இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் பாருக் அகமது தஞ்சையில் திருபர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்தியாவில் சுற்றுலாத்துறை மிகவும் நலிந்து போனது. சுற்றுலா பயணிகள் வருகை கொரோனா காரணமாக குறைந்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தற்போது வரும் ஜனவரி மாதம் முதல் அதை ஈடுகட்டும் வகையில் சுற்றுலாத் துறை பல்வேறு வகையில் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாற்று உத்தி செயல்படுத்தப்பட உள்ளது.
2019ம் ஆண்டு 7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார்கள். இந்திய அளவில் 17.91மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததில் தமிழகம் மிக அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. 2023ல் இதைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான பல்வேறு திட்டங்கள் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
கொரோனாவுக்கு பிறகு வரும் 2023ம் ஆண்டு சுற்றுலாதுறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியை பெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 27ம் தேதி உலக சுற்றுலா தினம், 16 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை தூய்மை விழிப்புணர்வு இயக்கம். 17 செப்டம் பரி முதல் 2 அக்டோபர் வரை 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வாரம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் தஞ்சையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
27ம் தேதி காலை 8 மணிக்கு தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தஞ்சை பெரியகோவில் வளாகத்திலிருந்து அரண்மனை வளாகம் வரை கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்த்து காலை 10:30 மணிக்கு தஞ்சை வளாகம் மராட்டா தர்பார் மண்ட பத்தில் மாணவ மாணவிகளுக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கத்தினை தலையாட்டி பொம்மை கைவினைக் கலைஞர் மாரியம்மன் கோவில் பிரபு மற்றும் கலைச்செல்வி ஆகியோர் அளிக்கின்றனர்.
நாளை மாலை 4.30மணிக்கு சிவகங்கைகுளம் ஸ்வாட்ஸ் சர்ச், வீணை தயாரித்தல். கோட்டை சுவர் மற்றும் அகழி தேர்முட்டி தஞ்சை நால்வர், இல்லம், அய்யன் குளம், சுந்தரம் மேல்நிலைப்பள்ளி வழியாக நெற்களஞ்சியம் வரை தொல்வியல் அறிஞர் செல்வராஜ் தலைமையில் பாரம்பரிய நடைபயணம் நடக்கிறது.
இத்திகழ்வில் மாவட்ட கலெக்டர், இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர். உதவி ஆணையர், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர். மாநகர மேயர். துணை மேயர், மாநகராட்சி ஆணை யர் உள்ளிட்டஅரசு அலுவலர்கள் மற் றும் உன்னாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
விழாவின் சிறப்பம்சமாக மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைகளான கொம்பு, நையாண்டி மேளம், புலி ஆட்டம். கும்மி கோலாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம் கரகாட்டம், தேவராட்டம் பம்பை ஆட்டம். கட் டைக்கால் ஆட்டம், காளியாட்டம், தப்பாட்டம் சிலம்பாட்டம் மற்றும் துடும்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் பாருக் அகமது தெரிவித்தார். அப்போது இந்திய சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலர் ராஜ்குமார் மற்றும் இன்டாக் கௌரவ செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
-ருசி, மைதீன்.