ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் தாட்கோ மூலம் ரூ.2 கோடியே 51 லட்சம் செலவில் ஆதிதிராவிட மாணவர் விடுதியும், வடக்கு பரும்பூரில் மாணவிகளுக்கு தாட்கோ மூலம் ரூ.2 கோடி 51 லட்சம் செலவில் ஆதிதிராவிட மாணவி விடுதியும் கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது பள்ளி மாணவ- மாணவிகளின் நிலைமையை கருத்தில்கொண்டு தரமான முறையில் விரைவாக கட்டிமுடிக்க ஒப்பந்ததாரரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அப்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி ஆதிதிராவிட நல துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளையும், விடுதிகளையும் தற்போது ஆய்வு பணியில் ஈடுபட்டுகொண்டு இருகிறோம். அந்த வகையில் ஓட்டப்பிடாரத்தில் தாட்கோ மூலம் இரண்டு விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் கட்டிடம் முழுமையாக முடிந்து மாணவ- மாணவிகளுக்கு பயன்பாட்டிற்கு வரும்.
ஆய்வின் போது கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அழகு, பஞ்சாயத்து தலைவர்கள் இளையராஜா, அருண்குமார், ஜெயந்தி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.