சமீப காலமாகவே போதை பொருட்கள் விற்பனை அமோகமாக இந்தியாவில் விற்பனையாகி வருவதாக செய்திகள் வரும் நிலையில் கேரளாவில் பல பகுதிகளிலும் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதும் பல கும்பல்கள் போலீசாரிடம் பிடி படுவதும் வழக்கம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஃப் கேரளா காவல் துறை அதிகாரி ஒருவரே போதைப்பொருள் கடத்த முயற்சித்த போது சிறப்பு எக்சர்சைஸ் படையினரால் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 80கிலோ கஞ்சாவை லாரியில் தந்தை தங்கப்பன் மகனான அருண் தங்கப்பன் மற்றும் இருவர் சேர்ந்து ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் தொடுபுழா என்ற பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர்.
இதில் ஒரு கிலோ கஞ்சா ரூபாய் 2000த்துக்கு வாங்கி 25,000ரூபாய் முதல் 40,000 வரை விற்பனை செய்கின்றனர். இதை மோப்பம் பிடித்த காவல் துறை சிறப்பு படையினர் இந்த நபர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர் அதற்காக உபயோகபடுத்திய லாரியையும் சீஸ் செய்துள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியான நாசர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.