கோவையில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்கள், தனியார் மருத்துவமனைகளில் பெறப்படுகின்றன.கோவை புறநகரில்-168, மாநகராட்சியில்- 70 என, 238 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. முகாம் நடத்த, 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள்.இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
–அருண்குமார் கிணத்துக்கடவு.