கோவை கொடிசியா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபனா, டென்னிஸ் விளையாட்டு குறித்து மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கலந்துறையாடினர் இதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:
கிரிக்கெட்டை கொண்டாடும் அளவுக்கு மக்கள் டென்னிஸ் விளையாட்டை, ரசிப்பதில்லை, அதனை பார்ப்பதில்லை, ஆனால் இந்த விளையாட்டு, மாணவர்களின் படிப்புக்கு மிகுந்த பங்காற்றுகின்றது, உடலையும், மனதையும், நிலையாக வைத்து கொள்ள இந்த விளையாட்டு பெரிதும் உதவுகின்றது.
மேலும் பெற்றோர்கள் மாணவர்களை எப்பொழுதும், வெற்றி பெற்று கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிரார்கள், அது மாணவர்களின் மனநிலையை மாற்றுகிறது, விளையாடும் அனைவரும் வெற்றியை எதிர்பார்த்தால் தோல்வியின் தன்மை மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.
தொல்வியின் தன்மை புரிந்தால் தான் மாணவர்கள், சமநிலையை எதிர்கொள்ள முடியும், தோல்வியை கண்டு துவண்டு போகாத நிலை மேம்படும் வெற்றியை மட்டும் கொண்டாடிக் கொண்டிருந்தால் தோல்வியின் ரணம் அவர்களை பாதிக்கக்கூடும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே வெற்றியை கொண்டாடுவது போல தோல்வியையும் அவர்களுக்கு கற்றுக்கொள்ள பழக்கப்படுத்த வேண்டும் என்றார், இனிவரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டை மக்கள் ரசிப்பது போன்று டென்னிஸ் விளையாட்டுக்களையும் அதிக அளவில் ரசிக்கும் காலம் வந்தடையும் எனவும், அப்படி வருவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என தெரிவித்தார் கிரிக்கெட்டை கொண்டாடுவது போல டென்னிஸ் விளையாட்டையும் மக்கள் கொண்டாடும் காலம் வரும் என்றார்.
மேலும் இப்பள்ளிகூடத்தில் டென்னிஸ் விளையாட்டை, மாணவர்களிடம், ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு இப்பயிற்சியை கற்றுத்தர வேண்டும் என்று, இப்பள்ளியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு என்னுடைய நேரடி கண்காணிப்பில், உள்ள பயிற்சியாளர்களின் மூலமாக மாணவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி அளித்து வருவதாக அவர் தெரிவித்தார் .
– சீனி, போத்தனூர்.