கோயம்புத்தூர் அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் சார்பில் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்!

கோயம்புத்தூர் அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் சார்பில் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கு கோவையில் நடைபெறுகிறது.

கட்டிடக்கலையின் முதுகெலும்பாக விளங்கும் பொறியாளர்களின் கூட்டமைப்பு பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு 1985 இல் துவங்கப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 50 மையங்களில் பத்தாயிரம் உறுப்பினர்களுடன் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் செயல்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் கிளை 1987ம் ஆண்டு துவங்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் தற்போது வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது. இயற்கையை அழிக்காமல் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வண்ணம் கட்டிடங்கள் அதன் சார்பு பொருட்களையும் பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் வளத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று ஒரே நோக்கில் வரும் செப்டம்பர் 30 மற்றும் நவம்பர் 1ஆம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி அரங்கில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதுகுறித்து அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர் தலைவர் பிரேம்குமார் மற்றும் வெள்ளி விழா குழுவின் தலைவர் சுதாகர் கூறுகையில், அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியரிங் 25வது வெள்ளி விழாவை கோவையில் இரண்டு நாட்களாக தேசிய அளவிலான கருத்தரங்கில் கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்தியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து முக்கிய பேச்சாளர்கள் உரையாற்ற உள்ளனர். குறிப்பாக வருங்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் வில்லேஜ் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமுதாயம் முன்னேறி வருவதற்கு கட்டிட வல்லுநர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ எனவே இதுகுறித்து பல்வேறு தகவல்கள் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் வளத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று உரிய நோக்கில் தேசிய அளவிலான கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடத்த உள்ளோம். இதில் பயிற்சி பெறும் பொறியாளர்கள் 350 பேர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் 50 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கருத்தரங்கு அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது என தெரிவித்தனர். பேட்டியின் போது, உடன் கோயம்புத்தூர் அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பரமேஸ்வரன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp