கோவை அரசூர் கே.பி.ஆர் பொறியில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவை கே.பி.ஆர்.குழுமங்களின் நிறுவனர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.கல்லூரியின் முதல்வர் அகிலா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.மேலும் இதில் ஜப்பானை சேர்ந்த கன்சல் ஜெனரல் ஆப் ஜப்பான் தாஹா மசாயுகி, மலேசியாவை சேர்ந்த சர்வே பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தர் சிப்ரண்டேஸ் பாப்போமா,நான்காம் நிறுவனத்தின் இணை இயக்குனர் உதயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் 759 இளங்கலை மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் பெற்றுக்கொண்டனர் இதில் ஒவ்வொரு துறையின் தரவரிசையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரி சார்பில் பாராட்டு பத்திரமும் பதக்கமும் வழங்கப்பட்டது.
மேலும் ரோபாடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையினுடைய ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஜெர்மனியின் லூகாஸ் நல்லி நிறுவனத்தில் ரூ.3.32 கோடி மதிப்பிலான புதிய உயர் ஆய்வு மையத்தை சிப்ரண்டேஸ் பாப்போமா தொடங்கி வைத்தார்.மேலும் மாணவர்களுக்கு தேவையான அணைத்து நவீனமான வசதிகளையும்,கற்றல்,
கற்பித்தல் முறைகளையும் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவ,மாணவிகள்,
பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
– சீனி,போத்தனூர்.