Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டி கிராமத்தில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சித்த மருத்துவம் மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருதிப்பட்டியில் நடைபெற்ற இந்த முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி வெண்ணிலா வெங்கடேசன் மற்றும் துணைத் தலைவர் கமலா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். இம்முகாமில் சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன் மற்றும் சிங்கம்புணரி மருத்துவமனை சித்த மருத்துவர் ரஹீமா பானு ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார்கள்.
முகாமில் காய்ச்சல் உள்ளவர்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சையும் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவமும், மக்களை தேடி மருத்துவம் சார்பாக பிசியோதெரபி சிகிச்சையும், கண் பரிசோதனை,
குருதி பரிசோதனை போன்ற சேவைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் சோலைசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர் எழில் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். முகாமில் 225 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.