சென்னை : தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை 26 வது வார்டு திருப்பூர் குமரன்- சோமசுந்தரம் தெருவில் தற்பொழுது ஒரு சிறிய பழுது பார்க்கும் ஒப்பந்த வேலை நடந்து முடிந்துள்ளது.
இந்தத் தெருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இன்டர் லாக்கிங் ஃபேவர் பிளாக்ஸ் மூன்று அடி உயரத்தில் அமைக்கப்பட்டது (அதற்கு முன்பு இருந்த தெருவின் உயரத்தை விட).
ஓராண்டுக்கு முன்பாக மின்சார வாரியம் பூமிக்கு அடியில் கேபிள்கள் அமைக்கும் பணியை மேற்கொண்ட பொழுது
இந்த தெருவில் ஆங்காங்கே இன்டர் லாக்கிங் பேப்பர் பிளாக்ஸ் அப்புறப்படுத்தப்பட்டு கேபிள் அமைக்கப்பட்டது.
தற்பொழுது பழுது பார்க்கும் ஒப்பந்ததாரர், பெரும் அளவு அப்புறப்படுத்தப்பட்ட பழைய கற்களையும், சிறிதளவு ஆங்காங்கே உடைந்து போன கற்களை, சீரமைத்து வேலையை முடித்திருக்கிறார்.
இந்த பழுது பார்க்கும் ஒப்பந்தத்திற்கு 3 லட்சம் ரூபாய் என்று கேள்விப்படுகிறோம்.
இங்கு தோராயமாக 4 நாட்கள், 4 ஆட்கள், 4 யூனிட் எம் சாண்ட், 4 மூட்டை சிமெண்ட் மற்றும்
400-500 புதிய இன்டர் லாக்கிங் பேவர் பிளாக் பயன்படுத்தப்பட்டு இந்த பழுது பார்க்கும் ஒப்பந்தம் முடிவடைந்து இருக்கிறது.
இந்த ஒப்பந்த வேலைக்கு செலவிடப்பட்டிருக்கும் தொகை எவ்வளவு என்றும் நம்முடைய வரி
பணம் எவ்வளவு கொள்ளை போயிருக்கும் என்பதனையும் உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறோம்!
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.