வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை கேரள மாநிலம் கொச்சி அழைத்து வரப்பட்டு, கொச்சியில் பல இடங்களில் பல நாள்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து கொச்சி மாநகர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். வயநாடு, பத்தேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ், 49, கொச்சி, எடப்பள்ளி, பினு கே.ஜி., 50, திருவனந்தபுரம், வல்லக்கடவு, நாசர் எம்., 42, திருச்சூர், கொடுங்கல்லூரைச் சேர்ந்த தில்மன் டி.வி., 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம், மனித கடத்தல் மற்றும் தவறான சிறை வைத்தல், காயப்படுத்துதல் மற்றும் ஒழுக்கக்கேடான கடத்தல் ஆகிய பிரிவுகளில் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது சம்மந்தமாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், காவல்துறை ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை
மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ற
போதிலும் பாதிக்கப்பட்டவர் ஆகஸ்ட் மாதத்தில்தான் காவல்துறையை அணுகினார் என்றும் அவர் கூறினார்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மற்றொரு நபர் மூலம் மார்ச் மாதம் கோவையில் இருந்து அழைத்து வந்தார். பின்னர், அவர் களமசேரியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர் எம்ஜி சாலைக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மீண்டும் மற்றொரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டு மிரட்டப்பட்டார் என்பது தெரிய வந்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் மே 2022 இல் அந்தப் பெண் கோவையில் உள்ள KMCH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கபட்ட பெண் எவ்வாறெல்லாம் தனக்கு கொடுமை சம்பவம் நேர்ந்தது என்று காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் தன்னை ஒரு வாரத்திற்கும் மேலாக சிறை வைத்து, குற்றவாளிகளாள் பலமுறை கற்பழிக்கப்பட்டதாகவும் பின்பு கோயம்புத்தூர் செல்வதற்காக ரூ.2,000 கொடுத்து தன்னை KSRTC பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடப்பட்டார் என்று கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரிடம் தங்களை இந்த வழக்கில் தவறாக இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பெண்ணை ஒருபோதும் சிறை வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் நகரின் வெவ்வேறு ஹோட்டல்களில் இருந்து இயங்கும் விபச்சார மோசடியின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் முழு விவரம் காவல்துறையின் முழு விசாரணைக்கு பின் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹரி சங்கர், கோவை வடக்கு.