கேரளா மாநிலம் மூணார் அடுத்து மாங்குளம் என்ற பகுதியில் சனிக்கிழமை நேற்று காலை 7மணிக்கு கோபாலன் என்பவர் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென புலி ஒன்று அவரை தாக்கியது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் கை மற்றும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சற்றே சுதாரித்துக்கொண்ட கோபாலன் தன் கையில் வைத்திருந்த அருவாளை பயன்படுத்தி தாக்கவந்த புலியை வெட்டினார். அதில் புலியானது இறந்து போனது.
உடனடியாக புலியால் தாக்கப்பட்ட கோபாலன் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். சுய பாதுகாப்புக்காக கோபாலன் புலியை கொன்றதால் அவர் பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டது என்று வனத்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.