கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகரன் – அருள்ஜோதி தம்பதியரின் மகள் எட்டு வயதான சுதீக்ஷா, தாத்தா பாட்டி தினத்தில் நான்காம் தலைமுறை சிறுமியான சுதிக்ஷா, தனது நூறு வயது கடந்த பாட்டி பூச்சியம்மாளை கவுரவிக்கும் விதமாக தற்காப்பு கலையில் புதிய உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளார்.
தற்காப்பு கலையில் தலை வாசல் முறையில் ஒற்றை சிலம்பத்தை மூன்று மணி நேரத்தில் 12,300 தடவை சுற்றி இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவரது இந்த சாதனை நிகழ்வை நூறு வயதை கடந்த இவரது எள்ளு பாட்டி பூச்சியம்மாள் தொடர்ந்து பார்த்து பேத்தியை உச்சி முகர்ந்து வாழ்த்தினார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தாத்தா பாட்டி தினத்தில் நான்காம் தலைமுறை பேத்தியின் சாதனையை ரசித்த நூறு வயது கடந்த பாட்டியின் மன உறுதியை சிறுமியின் பயிற்சியாளர் பிரகாஷ் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.
– சீனி, போத்தனூர்.