சென்னை: தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம் திமுக சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா செங்கல்பட்டில் சிங்கபெருமாள் கோயில் அருகே மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது. அதில் கை, கால்களை உடைத்து விடுவேன் என ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஆலையின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராஜா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது நண்பரை சிலர் நிறுவனத்திற்கு நேரில் அனுமதிக்கவில்லை .அவர்கள் நிறுவனத்திற்கு நேரில் சென்றேன் .அவர்கள் பேசியதை கட் செய்துவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர் என்று அவர் கூறியிருந்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
–செந்தில் முருகன்,சென்னை தெற்கு.