தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வருகிற 14ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடியில் நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தென்பாகம் காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது. இவ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.
விழாவை முன்னிட்டு சென்னை புத்தர் கலைக் குழுவினரின் பறை இசை ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விவிடி சிக்னல் அருகேயுள்ள திடலில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், மற்றும் கீதாஜீவன், ரவிகுமார் எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் சிந்தனை செல்வன், ஆளுர் ஷா நவாஸ், பாலாஜி, பாபு, விடுதலை சிறுத்தைகள் மாநில பொதுச் செயலாளர் வன்னியரசு, கனியமுதன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில தலைவர் மலைச்சாமி, முதன்மை செயலாளர் பாவணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் தலைவர் சவுந்திரராஜன், பொதுச் செயலாளர் துரை, பொருளாளர் வேத மானிக்கம் மற்றும் சிலை அமைப்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.