நேற்று மதுரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தமிழ் நாடு எதிர் காட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது இதுதான் ஊடகங்கள் பத்திரிகை நிருபர் உன்மையான செய்தி மக்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. செந்தில்ராஜ் ஊடகவியலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துக், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து பேசிய அவர்:
“பேரிடர், தேர்தல், முதியவர்கள், கோரோன, வெள்ளம், போன்ற பணிகளின் போது பத்திரிகையாளர்கள் மிகவும் உதவியாக இருந்துள்ளீர்கள். அரசு திட்டங்கள் பல இருந்தாலும் அந்த திட்டங்கள் தேவையானவர்களுக்கு கிடைக்க அதன் பயன் குறித்த ஊடகங்கள் பொது மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நீங்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் பற்றி வெளியிடும் கட்டுரை பலருக்கு பயன்படும். சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய திட்டங்களை ஊடகவியலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் இந்த பயிற்சி நடத்துவது அவசியம் ஆன ஒன்று. நமது மாவட்டத்தில் அறிய படாத சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளனர். நாட்டில் முதல் பத்திரிகை தொடங்கிய ஒருவர் அவர் வெளியிட்ட செய்தியால் ஒரு ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பத்திரிக்கை சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும், நம்மால் பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். தன்னார்வலர்கள் போன்றவராகள் செய்யும் நல்ல பணிகளை நீங்கள் பாரட்டுவதான் மூலம் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்றார்.
மத்திய பத்திரிகை தகவல் அலுவலக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை பேசுகையில். சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்க்கும் பணிகளை பத்திரிகை தகவல் அலுவலக செய்துவருகிறது. இந்த துறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பத்திரிகை செய்தியாளர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி, மத்திய மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களை செய்தியாளர்களிடம் தெரியப்படுத்த இந்த கலந்துரையாடல் நடத்த படுகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப அரசிடம் திட்டங்கள் உள்ளது. குழந்தை, பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், மீனவர்கள், விவசாயிகள் என மத்திய அரசிடம் மட்டும் சுமார் 157 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு சென்று கொண்டுள்ளது. ட்டம் யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. சமுதாயத்திற்கு கடமை ஆற்ற நீங்கள் திட்டங்களை தெரிந்து வைத்திருங்கள் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், சென்னை மத்திய பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குனர் நதீம் துபைல் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி எல். சரஸ்வதி தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கே. செல்வியின் இன்பராஜ் மீன் துறை உதவி இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.