தொடரும் பள்ளி மாணவர்கள் தற்கொலைகள் என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில் கல்வி துறை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்கள் பொதுமக்கள். தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் செல்வி அனுஜா கிருஷ்ணா (15), தூத்துக்குடி மில்லர் புரத்தில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென வீட்டின் பாத்ரூமுக்கு சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அவர் தந்தை ஜெயக்குமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.