தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு வரும் வழியில் பெட்டிக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் கடையில் குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடைக்கு வந்த பள்ளி குழந்தைகளிடம் கடைக்காரர், “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். பள்ளிக்கூடத்திற்கு செல்லுங்கள். இனி தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தின்பண்டம் கொடுக்க முடியது என்று சொல்கிறார்கள் என வீட்டிலும் சொல்லுங்கள். இனி கொடுக்க மாட்டாங்க. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” என்று சொல்கிறார்.
இதனை கேட்ட அந்த பிஞ்சு குழந்தை, என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறது. அதற்கு கடைக்காரர் உடனே, ‘கட்டுப்பாடு என்றால் ஊரில் ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கிறார்கள். உங்கத் தெருவில் யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாது என்று’ என்று கூறி அந்தக் குழந்தைகளை கடைக்காரர் திருப்பி அனுப்புகிறார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து சாதிய தீண்டாமை குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், முருகன், சுதா, குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று மாணவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளியிலேயே சாதிய தீண்டாமை கொடுமை நிகழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-நாளைய வரலாறு செய்திகளுக்காக, தூத்துக்குடியில் இருந்து,
-வேல்முருகன்.