கோவை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன் சார்பில் 5 மாநிலங்களுக்கு இடையேயான தென்னிந்திய அளவிலான பாராவாலிபால் மற்றும் த்ரோபால் போட்டி மறைந்த ரோட்டரி சங்க உறுப்பினர் ரோட்டேரியன் டாக்டர். கிருஷ்ணானந்தா நினைவாக கிருஷ்ணானந்தா நினைவு கோப்பை என்ற பெயரில் நடைபெற்றது. இந்த போட்டிகள் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யலாயா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பாரா வாலிபால் ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்த்து புதுச்சேரி அணியினர் விளையாடினார். இதில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. இரண்டாவதாக நடைபெற்ற பெண்கள் த்ரோபால் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணியினர் விளையாடினார். இதில் அணி கர்நாடகா அணி வெற்றிபெற்றது.
இதில் வெற்றிபெற்ற பாரா வாலிபால் ஆண்கள் தமிழ்நாடு அணிக்கு முதல் பரிசும், ஆந்திரா மாநில அணிக்கு இரண்டாம் பரிசும், புதுச்சேரி அணிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் ஆண்கள் அணிக்கான சிறந்த விளையாட்டு வீரராக தமிழ்நாடு அணியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதே போல் பெண்கள் த்ரோபால் போட்டியில் வெற்றி பெற்ற கர்நாடகா அணிக்கு முதல் பரிசும், ஆந்திரா அணிக்கு இரண்டாம் பரிசும், தமிழ்நாடு அணிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக கர்நாடகா மாநில அணியைச் சேர்ந்த கீதா தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இது குறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் திட்ட தலைவர் ரொட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இப்போட்டிகள் கோவையில் மாவட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. இம்முறை இப்போ போட்டிகள் மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றது. வரும் ஆண்டுகளில் தேசிய அளவில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இப்போட்டியில் பங்குபெறும் வீரர்கள் ஒரு அணிக்கு 10 நபர்கள் விளையாடுவார்கள் இதில் 6 வீரர்கள் களத்திலும் மற்ற 4 வீரர்கள் சப்சியூட் ஆகவும் இருப்பார்கள். இவர்களுக்காக சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானத்தையும் ஆங்கீகரிக்கப்பட்ட நடுவர்களையும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சாரிபில் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பாரா ஒலிம்பிக் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாராவாலிபால் போட்டியில் ஆண்களும், த்ரோபால் போட்டியில் பெண்களும் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில் 5 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்று விளையாடினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சோரி மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாடும் வீரர்கள், அவர்கள் எடுக்கும் புள்ளிகள் தேசிய அளவில் நடைபெறும்அவர்களின் தேர்வுக்கு இந்த புள்ளிகள் தகுதியாக சேர்த்துக் கொள்ளப்படும்.
– சீனி, போத்தனூர்.