கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன் (18) தன் நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று காலை காரில் தன் நண்பர்களுடன் திரும்பி வரும்பொழுது தொண்டாமுத்தூர்,
தென்னமநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் ஒரு வளைவில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு 120 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் கவிழ்ந்து.
இந்த விபத்தில் ஆதேஷ் (18) ரவி (18) நந்தனன் (18) ஆகியோர் உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ரோஷன் காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.