கோவை ரங்கே கவுடர் வீதி பலிஜாவார் சந்தில் வசிப்பவர் விஜயகுமார், 42. இவர் சுக்ரவார்பேட்டையில் வி கோல்டு ஜூவல்லரி என்ற பெயரில், நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் காஜா உசேன் 42.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இருவரும் தங்கக்கட்டிகளை விற்பனை செய்வதும், வாங்குவதும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்களிடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த காஜா உசேன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நகைக் கடையில் இருந்த
விஜயகுமாரை இடையர் வீதிக்கு கடத்திச்சென்று தாக்கி முத்திரை தாளில் கையொப்பம் பெற்றனர்.
இச்சம்பவம் குறித்து விஜயகுமார், வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தி, காஜா உசேனை கைது செய்தார். ரகீம், ஜாகீர் பாய், சர்புதீன், ஜமேஷா ஆகியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.