சூலூரில் நான் முதல்வன் பள்ளிக் குழந்தைகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரான் கலந்து கொண்டு பட்டயக் கணக்காளராவது எப்படி என்பது குறித்து மாணவ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை மற்றும் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்திய பட்டய கணக்காளர் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் பட்டையைக் காணக்காளர்கள் இணைந்து தொழிற்சார் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பன்னிரண்டாவது வகுப்பு முடித்துவிட்டு மாணவர்கள் பட்டயக் கணக்காளர்கள் படிக்கும் முறை தேர்வு முறை குறித்தும் எவ்வாறு படிக்க வேண்டும் என்பது குறித்தும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தமிழக பட்டைய கணக்காளர் முன்னாள் தலைவர் ராமசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். கலந்துரையாடலின் போது மாணவி ஒருவர் அரசு மருத்துவமனைகளில் அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதில்லை என்று மேடையில் ஏறி கேள்வி எழுப்பினார் அதற்கு மாணவர்கள் அரசு அதிகாரிகள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஒரு சிலர்கள் பயன்படுத்தவில்லை அதுவும் மாறி விடுவார்கள் என பதில் அளித்தார் இந்த கேள்வி கேட்ட மாணவியை சக மாணவ மாணவியர் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் செய்திகளிடம் பேசிய தமிழக பட்டைய கணக்காளர் முன்னாள் தலைவர் ராமசாமி தமிழக அரசு மாணவர்களுக்கு அதற்கு எண்ணற்ற திட்டங்களை செயலாற்றி வருகிறது அதில் பட்டயக் கணக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கும் எம் எஸ் வி மூலம் அவர்களையும் மாணவர்களுக்கு வழிகாட்ட அழைத்துள்ளனர் அதன்படி நாங்கள் அனைவரும் கணக்காளர் பயிற்சியை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஒரு வேலை பெற்றுள்ளனர் அதேபோல வேலை வாய்ப்பு பட்டயக் கணக்காளர் படிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
– சீனி,போத்தனூர்.