சென்னை: குரோம்பேட்டையில் இருந்து கோவிலம்பாக்கம் செல்லும் சாலையில் அருள்முருகன் நந்தவனம் நகர், தாம்பரம் மாநகராட்சியின், வார்டு 22 அருகில் அவ்வப்போது பாதாள சாக்கடை குழாய்கள் வெடித்து சாலை உபயோகிப்பாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் இடையூறு அளிக்கிறது.
இந்த குழாய்யில் கடந்த (2021) டிசம்பர் மாதத்தில் வெடிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின் பழுது பார்க்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த பாதாள சாக்கடை குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது, இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி தரக்குறைவான குழாய்கள் மற்றும் உபகரணங்களை உபயோகிப்பதாலும், பாதாள சாக்கடை தொடர்பான தொழில் நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகள் இதை கையாள்வதாலும், மீண்டும் மீண்டும் இந்த பழுது ஏற்படுகிறது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் இதனை உடனடியாக காலம் தாழ்த்தாமல் சரி செய்ய வேண்டும்.
உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய செயலாளர் திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப. மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு.பா. பொன்னையா இ.ஆ.ப. இவர்களிடம் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்திலிருந்து ஒரு அதிகாரியை பிரதிநிதித்துவ முறையில் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு தாம்பரம் மாநகராட்சிக்கு நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
–செந்தில் முருகன்,சென்னை தெற்கு.