கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த தமிழக கேரள எல்லைப் பகுதியான பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட பரம்பிக்குளம் அணையில் நேற்றிரவு அணையில் உள்ள மூன்று மதகுகளில் ஒரு மதகு கழன்று விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம், கேரள பொதுபணித் துறை அதிகாரிகள் மற்றும் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முனராய் ஜோஷி உள்ளிட்டோர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை எப்படி கட்டுப்படுத்துவது என அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பரம்பிக்குளம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் மேலும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.